Thursday, October 23, 2008

ஏர்வாடி சு.இராதாகிருட்டிணன்


வணக்கம்.வாழையடிவாழையென வந்த தமிழ்க்கவிஞருள் ஏர்வாடி சு.இராதாகிருட்டிணனும் ஒருவர்.பாரதியாரும் பாவேந்தரும் கண்ணதாசனும் தமது படைப்புகளால் அவருக்கு உரமூட்டி ஊக்கப்படுத்தி அவரைக் கவிஞராக்கிவிட்டார்கள் எனக் கருதுகிறார்.அடக்கமும் அன்புள்ளமும் ஒருங்கே கொண்டு திகழும் அவரது கவிதைகளையும் பிற படைப்புகளையும் முப்பத்தைந்து ஆண்டுகளாக அவர் நடத்திவரும் “கவிதை உறவு” இதழ் தொடர்பான செய்திகளையும் இந்த வலைப்பூ மூலம் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.உங்கள் கருத்துகளை அவ்வப்போது தெரிவித்து
ஊக்கப்படுத்துவீர்கள் என நம்புகிறேன்.நன்றி.